June 27, 2010

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5

ஸா..பா.. பார்க்கலாம் வர்றீங்களா? தொடர் 5
தமாம் பாலா                                                                              For Sa Pa 5 Audio, Please click here

    Sapa Church near Market
போன தொடரிலே, லவ்வர்ஸ் மார்கெட் பற்றி குறிப்பிட்டேன் அல்லவா? அது பற்றி அரசல் புரசலாக இணையத்திலும், வியட்நாம் நண்பர் மூலமாகவும் கேள்விப்பட்டிருந்தோம். ஒவ்வொரு வாரமும், சனி இரவு லவ்வர்ஸ் மார்கெட்டில் ஒரு குட்டி சுயம்வரமே நடக்கும் என்றும், பெண்கள் இருட்டில் அமர்ந்திருப்பார், ஆண் பாடிக்கொண்டே செல்ல, பாடல் பிடித்துவிட்டால் பெண்ணும் முதலில் பாடலிலும் பின் நிரந்தரமாக வாழ்க்கையிலும் இணைந்து கொள்வாள் என்று பல பல கதைகள். இதை கேள்விப்பட்ட நம் தமிழ் நண்பர்கள, முன்னேற்பாடாக சங்கீத சாதகத்தை மானசீகமாக தொடங்கி விட்டார்கள்!

அது வெள்ளி காலை தான், நண்பர்கள் அனைவரும் ஸம்மிடிலிருந்து கால்நடையாக மார்கெட் உலா புறப்பட்டோம் ; ஜிங் மற்றும் தோழிகள் புடை சூழ. அந்த பெண்கள் ஒவ்வொருத்தியும் இங்லீஷில் சும்மா பொளந்து கட்டுகிறார்கள். (பொதுவாக வியட்னாமிகள் ஆங்கிலத்தில் பேசுவது கொஞ்சம் தான், ஹனாயில் ; ஆனால் ஸாபாவில் சின்ன பெண் கூட நன்றாக ஆங்கிலம் பேசுவதை கவனித்தேன், எல்லாம் சுற்றுலா தொழில் செய்யும் மாயம்!)

    Sapa local market

முதலில் வந்தவுடன் ‘ஆர் யு இண்டியன்? வாட் இஸ் யுர் நேம்?” என்று கேட்டாள். நண்பர்கள் சொல்லி வைத்தார் போல பேரை மாற்றி மாற்றி சொல்லிவிட்டனர். ரவி, ராம்கி ஆகி, சுரேஷ் ரவி ஆகி ஒரே பெயர் குழப்பம் ஆகிவிட்டது! நான் பொய் சொல்வதில் கொஞ்சம் சோம்பேறி, ஆகவே என் பெயர் ‘சுப்ரா’ என்று சொல்லிவிட்டேன்.

தண்ணி இல்லாத காலத்து நம் ஊர் கபாலீஸ்வரர் கோயில் குளம் போல மார்கெட் படிக்கட்டுகளுடன் பள்ளத்தில் இருந்தது. வழக்கம் போல எல்லா பொருட்களும், அத்தியாவசம் இல்லாத அதே சமயம், ஸாபாவிலே வாங்கினேன் என்று சொல்லிக் கொள்ள கூடிய ‘ஸவொனிர்’ பொருட்கள். வழக்கமாக வாங்கி குவித்து விட்டு பின் ராதிகாவிடம் ‘வாங்கி கட்டி கொள்ளும்’ அபாயம் கருதி நான் பர்ஸை தொடாமல் விரதம் காத்தேன். பொருள் விலையை மட்டும் நான் கேட்டுவிட்டு பேரம் பேசாமல் போவதால் ஸாபா வியாபாரிகள் சற்று குழம்பித்தான் போய்விட்டார்கள். மணி அய்யா, ஒரு சுத்தியலுடன் இணைந்த ஸ்பானர் போன்ற ஒரு விசித்திரமான ஒன்றை வாங்கினார். ரவி களத்தில் இறங்கி, பேரம் பேசி அங்கே ஒரு ‘அறிவிக்கப்படாத ஆடித்தள்ளுபடியையே உருவாக்கி விட்டார். கடைசியில் நானும் குறைந்த விலையில் சில கீ-செயின் பொம்மைகளை வாங்கி விட்டேன்.

    Scorpion wine(?!)

மதிய உணவு வேளை வந்துவிட, ஸம்மிட் திரும்பி, தரை தளத்து உணவு விடுதியில் சூடாக அரிசி சாதம் மட்டும் வாங்கிக் கொண்டு, ஹனாயிலிருந்து கொண்டு வந்திருந்த சபாத்தி (உபயம் ராம்கி), காரகுழம்பு, மிளகு குழம்பு மற்றும் புளிக்காய்ச்சலுடன் பசி தீர்ந்தது!

    Sa Pa Doom Doom Sa Pa Doom Doom!

சின்ன ஓய்வுக்கு பிறகு, மலையடிவாரத்து கிராமத்துக்கு போகிறோம் என்றும், பாதி தூரம் பஸ் மூலம் மீதி 2/3 கி.மீ நடந்தும் என்றும் முடிவானது. அந்த பயணம், புகைப்படங்கள் மற்றும் வீட்டுத்தங்கல் பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்...



ஸாபா தொடரும்.

5 comments:

அது ஒரு கனாக் காலம் said...

நீங்க என்ன எசப்பாட்டு பாடுனீங்க ????

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க‌ க‌னாக்கால‌ம்!

(வீட்டுக்காரி) வ‌ச‌ பாட்டுக்கு
ப‌ய‌ந்து, நெச‌ பாட்டு எதுவும்
பாட‌லை; க‌னா பாட்டு ம‌ட்டுமே :‍)

ராமலக்ஷ்மி said...

படங்களும் அனுபவமும் சுவாரஸ்யம்:)!

கடைசிப் படத்திலிருக்கும் முரசுகளெல்லாமும் விற்பனைக்கா?

ராமலக்ஷ்மி said...

கனா பாட்டு?

ராதிகா பதிவெல்லாம் வாசிக்க மாட்டார்களோ:))?

Dammam Bala (தமாம் பாலா) said...

வாங்க‌ ராம‌ல‌க்ஷ்மி,

மாட்டு தோல் முர‌சும், கொம்பும்
எல்லாமே விற்ப‌னைக்குத்தான்!

க‌னா பாட்டுக்குள்ளே ம‌ட்டும‌ல்ல‌
என் ப‌திவுக்குள்ளும் ரா‍' ம‌ற்றும்
குழ‌ந்தைக‌ள் வ‌ருவ‌து இல்லை :(
அவ‌ங்க‌ளுடைய‌ உல‌க‌மே த‌னி!