பர்ஃப்யூம் பகோடா, வியட்நாம்
நம்ம ஊர் ஜவ்வாது மலை, திருநீர்மலை போல வியட்நாமிலும் வாசனை மலைகள் உண்டு! லேடி புத்தா, வந்து இறங்கியதால் மணக்கும் 'பர்ஃப்யூம் பகோடா செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. 7 கடல் 7 மலை இல்லீங்க! 1மணி நேர கார் பயணம், அதன் பின் யென் ஆற்றில் 1 மணி படகு பயணம். கொஞ்சம் பயம் தான்; படகுக்கு வெளியே சில இஞ்ச் விட்டு நீர் மட்டம்!!
அதன் பின், 10 நிமிட கேபிள் கார் பயணம், அதன் பிறகும் ஏறி இறங்க கரடுமுரடான படிகளும், குகை கோயிலும்! கோயிலுக்கு வந்தால் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கேரண்டி! ஆண்/பெண் குழந்தை தேர்வுக்கு தொட்டுக் கும்பிட தனி தனி கற்கள்!!
குழந்தை வந்த பின்.. பராமரிக்க பணம் வேண்டுமல்லவா?? கவலை வேண்டாம்.. வெள்ளி கல்லையும், தங்க கல்லையும் தொட்டு விட்டால் போதும்!!! நாடுகள் வேறுபட்டாலும், நம்பிக்கைகள் வேறுபடுவதில்லை!! :)) படங்களை பார்த்து பாக்கியை தெரிந்து கொள்ளுங்கள்!!
No comments:
Post a Comment