அன்புள்ள பாலா சார்,
இந்த இனிய இரவு உணவு வேளையில்,
நல்ல நிலவோடும், நலம் நாடும் நண்பர்களோடும்,
உற்ற தமிழோடும், மனதை உருக்கும் நினைவுகளோடும்,
அருமை கவிதையோடும், அறுசுவை உணவோடும்,
என்றும் வற்றாத எங்கள் வாழ்த்துக்களோடும்
உங்களை சந்திப்பதில் சிந்தை மகிழ்கிறோம்
நீங்கள் பதவி உயர்வு பெற்றதை முன்னிட்டு,
நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்களுக்கு நம் ஜமீல் ஸ்டீல் தமிழ் நண்பர்கள்
சார்பில் எங்கள் மனம், மெய், மொழி இனைந்த
வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும்
தெரிவித்துக் கொள்கிறோம்,
இத்தனை வருடங்கள், நீங்கள் இங்கே பணியாற்றி
இன்று எங்களை பிரிந்து போகும் இந்த கடிண நேரத்தில்
உங்களோடு நாங்கள் நட்புறவாகி களித்த நாட்களை
நெகிழ்வோடு, நினைத்து பார்க்கிறோம்,
ஒவ்வொரு நாளும் புதிய செய்தியாய்,
முன்னேறிய தொழில்நுட்பமாய்,
முதிர்ந்த ஆலோசனைகளாய்,
அற்புத கவிதைகளாய். ஆனந்த தமிழாய்,
நல்ல நகைச்சுவையாய், நவீன சாதனங்களாய்
உங்களிடமிருந்து நாங்கள் கற்றதும் பெற்றதும் பல.
பொறியாளராய் பணியாற்றி ஆனாலும் இலக்கியமாய்
வாழ்ந்து மறைந்தவர் அந்த சுஜாதா எனில்
இங்கே இதோ எங்கள் (ஜமீல்) சுஜாதா என்று நாங்கள்
பெருமையோடு உங்களை சொல்லுவோம்.
உங்கள் கைகளிலும் வார்த்தைகளிலும் விளையாடிய
தழிழையும், ஆங்கிலத்தையும் (டோஸ்ட் மாஸ்டர்)
தனியே சொல்லிட வில்லையெனில்
என்னை என் தமிழ் விட்டு விடாது,
உங்கள் ப்ளாக் கில் புதிதாய் படிப்பத்ற்கு
தினமும் காத்திருந்தோர் பலர்.
உங்கள் நாவல்களை, சிறுகதைகளை,
ஒலி வடிவத்தில் நீங்கள் படைத்த
பெறும் இலக்கியஙகளை அறிந்தே
இங்கே இலக்கியத்தை அறிந்தார் பலர்,
உஙகள் எழுத்துக்களை பார்த்தே
நல்ல தமிழைப் பார்த்தே
இலக்கியத்தில் நுழைந்தவர்கள் இங்குண்டு,
கடும் அலுவலக வேலை பளுவுக்கிடையேயும்,
குடும்ப சூழலுக்கு மத்தியிலும், கிடைத்த
மிகக் குறைந்த நேரத்தில் நீங்கள் செய்த
மகத்தான எழுத்துப்பணி என்னையும் அதன் பக்கம் அதிகமே ஈர்த்தது
மேலும் எங்கு போட்டிக்கு சென்றாலும், கையில் வெற்றிக் கோப்பையோடு
தான் திரும்புவார் என்று நம் நன்பர்களால் சொல்லப் பட்ட ஒரே நண்பர்
டோஸ்ட் மாஸ்டர் பால சுப்ரமணியன் அவர்கள் தான்.
டோஸ்ட் மாஸ்டரில் உங்கள் பங்காற்றுதலுக்கு இதை விட நல்ல
பொருத்தமான கருத்தை யாரும் தேடி விட இயலாது
நம் தமிழ் நண்பர்களை, ஆங்கிலமும் நன்கறிந்த டமிழ் நண்பர்களாக்க
நீங்கள் செய்த முயற்சிகளும் மிகப் பல,
என் வயதில் பாதியை அனுபவமாக பெற்றிருக்கும் நீங்கள்
எங்களுடனும் வேறுபாடின்றி இனிமையாய் பழகி
எங்கள் உரைகளில் கலந்து கொண்டதும் மறக்க முடியாதவை,,
மதிய உணவு மற்றும் தேநீர் வேளைகளின் போது நம்
அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்ததும்,
வேலை முடிந்து தாமதமாக நான் திரும்பிய பல சமயங்களில்
உங்களுடன் மெல்லிசை கேட்ட வண்னம் பயணித்ததும்
ஏ/சி கேண்டீனில் நம் க்நண்பர்களோடு சாப்பிடும் போதும்
என் சிறுகதையை நீங்கள் பொறுமையாய் அமர்ந்து கேட்டதும்
என் எழுத்துக்களை இனையத்தில் பிரசுரமாக்க ஆலோசனை தந்ததும்
இப்படியாய் உங்கள் அருகாமையில் நாங்கள் பெற்றிருக்கிற
மறக்க முடியாத நினைவுகள் நீண்டு கொண்டே செல்லும்,
இதை எழுதி முடிக்க நீண்டதொரு நாவல் படைத்தாலும் போதாது
இந்த நினைவுகள் மேன்மெலும் உயிப்புடன் சுற்றித் திரிய
தூரங்களை குறைக்கும் தகவல் சாதனங்களின் நெருங்கிய நண்பராகிய
நீங்கள் எங்கள் நட்பை போல் தொடர்புகளையும் மறவாது
தொடர வேன்டும் என விரும்புகிறோம்
இந்த மகிழ்வான தருணத்தில் பல்துறை விற்பன்னரான
நீங்கள் பணீயிலும், வாழ்விலும்
மேன்மேலும் சிறந்து விளங்க வேண்டுமாய் வாழ்த்தும்
அன்பு நெங்சங்கள்
ஜமீல் ஸ்டீல் தமிழ் நண்பர்கள்,
தமாம்
ஞாயிறு, இரவு 9.00 மணி, 21-03-2010.
(ஜமீல் ஸ்டீல் தமிழ் நண்பர்கள் சார்பாக
அன்புடன் ரியாஸ்.....
3 comments:
வாழ்த்துக்கள் பாலா:)! அடுத்த பணியிடம் எங்கே? இந்தியா திரும்புகிறீர்களா?
வணக்கம், ராமலக்ஷ்மி, நான் இப்போது வியட்னாம் ஹனாயில் இருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. என்றும் அன்புடன் பாலா
நல்லது:)!
Post a Comment