P.E.B Building அப்படின்னா என்னங்க? தொடர் 1
தமாம் பாலா
அன்பார்ந்த சக வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த 2010 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நாமளும் மார்ச் 2008லே வலைபதிவுலே குதிச்சு (அரசியல்லே குதிச்சு.. இல்லேங்க :-) விளையாட்டுப்போலே தட்டுதடுமாறி 60 பதிவுகள் போட்டாச்சு ; இன்னும் ஒருமுறை கூட துறை சார்ந்த பதிவுகள் எதுவும் போடலையேன்னு எனக்கே ஒரு குறை இருந்துச்சு. அந்த குறையை நிவர்த்தி செய்ய புத்தாண்டிலே நல்ல ஒரு தொடக்கமாத்தான்.. இந்த பதிவு!
கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டை கட்டிப்பார் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற தமிழ் பழமொழி. அன்னாடம் காய்ச்சி முதல், அம்பானி வரை, வாழ்க்கையிலே சொந்தமா ஒரு வீடாவது கட்டிடணும் என்பது தான் தலையாய கனவு. வீ.சேகர் லோ பட்ஜெட் குடும்ப படத்திலேர்ந்து, ஷங்கரின் பிரம்மாண்டமான பல கோடி பட்ஜெட் படம் வரைக்கும் இருக்கிற மாதிரி, வீடுகளின் அளவுகள், அடுக்குகள், அறைகள், அவற்றின் விலை மதிப்பீடுகளின் வித்தியாசம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.
கடந்த 100 ஆண்டுகளிலே, இந்திய வீடுகளை பின்னோக்கி பார்க்கும் போது, ஓலை/கீற்று மண் குடிசை, ஓட்டு வீடு, காரை/செங்கல் சுவர் வீடு, மர உத்திரம் தாங்கிய மெட்ராஸ் டெரெஸ் எனும் ஒட்டு வீடு, மற்றும் தற்காலத்தைய கான்க்ரீட் சிலாப் உள்ள ஃப்ரேம் ஸ்ட்ரக்சர் எனும் கான்க்ரீட் தூண்கள் மற்றும் கான்க்ரீட் பீம்(உத்திரம்) உள்ள கட்டிடங்கள் என பலபல வகை பரிணாம வளர்ச்சிகள் தென்படுகின்றன.

மேற்கூறிய எல்லா வகை வீடுகளும், குடியிருப்பு மற்றும் அலுவலக உபயோகங்களுக்காகவே பெரும்பாலும் கட்டப்படுகின்றன. இந்த கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் கான்க்ரீட் ஆனது இன்ஸிட்டு (insitu) என்று சொல்லப்படும் வகையில், கட்டிடம் வளர வளர கலந்து, ஊற்றி, காய வைத்து கெட்டி படுத்தப்படுகிறது.
கான்க்ரீட் தூண்கள், உத்திரங்கள், சிலாபுகள், சுவர்கள் ஆகியவற்றை தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரித்து பின் கட்டிட ஸைட்டில் (site) கொண்டு வந்து சேர்த்து, கோர்த்து கட்டும் முறையானது ப்ரீ ஃபேப்ரிகேட்டட் ஸ்டரக்ட்சர் ( pre fabricated structure) எனப்படுகிறது. பெரும்பாலும், மனித வளம் குறைந்த, ஊதியம் அதிகமாக உள்ள மேலை நாடுகளில் இது பின்பற்றப்படுகிறது. நமது நாட்டில், குறைந்த அளவில் சிப்போரக்ஸ் நிறுவனம் செய்யும் கட்டிட பொருள்கள் மற்றும் ரயில்வே கான்க்ரீட் ஸ்லீப்பர்கள் இந்த வகையில் உள்ளன (நான் பதினைந்து வருடங்களாக இந்தியாவுக்கு வெளியே வசிப்பதால், தற்போதைய நிலவரம் பற்றி, அறிய ஆவலாக உள்ளது, கட்டுமானதுறை சார்ந்த சகபதிவாளர்கள் இது பற்றி எழுதலாம்)
தொழிற்சாலை கட்டிடங்களைப்பற்றி பேசும் போது, இரும்பு கட்டிடங்களே அதிகம் எனத்தோன்றுகிறது. ஆங்கிலேயர் காலத்து இரும்பு கட்டிடங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பாலங்களில், ஹாட் ரோல்டு (Hot rolled) என்கிற இரும்பை உருக்கி வார்த்த தூண்கள்/உத்திரங்கள் கொண்டு ரிவெட் இணைப்புகளால் (Rivetted connection) கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மெல்ல மெல்ல, ரிவெட்டுகளுக்கு பதிலாக போல்ட்/நட் மற்றும் வெல்டிங் இணைப்புக்கு மாறிவிட்டோம் (bolted and welded connections). 70கள் வரை இது போன்ற கட்டிடங்களுக்கு அஸ்பெஸ்டாஸ் மற்றும் ஜி.ஐ தகடுகளின் கூரை போடப்பட்டது, ஜே போல்டுக்களால் உத்திரத்தோடு இணைத்து; காற்றடித்தால் பறந்து விடாமல். 80களின் இறுதி வருடங்களில், ஒரு புதுவடிவ கட்டுமானம் தொடங்கியது. இதை தற்காலத்து பி.இ.பி (P.E.B) வகை கட்டிடங்களுக்கு முன்னோடி என்றும் சொல்லலாம். ஆம், இந்தியாவில் டி.ஐ (முருகப்பா குழுமம்) மற்றும் நாகர்ஜுனா நிறுவனங்கள் ஸெட் (Z) பர்லின் அல்லது உத்திரம் ( நன்கு கவனிக்கவும், Z பாதுகாப்பு பிரிவு அல்ல :-) சந்தைக்கு வந்தது. இவை கோல்டு ஃபார்ம் (cold form elements) வகையை சேர்ந்தவை; இரும்பை உருக்கி ஊற்றுவதற்கு பதிலாய், மெல்லிய தகடுகளை வளைத்து செய்யப்படும் உத்திரங்கள் இவை!
தொழிற்சாலை கட்டிடங்களில் தூண்களை, உத்திரங்களை, கூரை ஆகியவற்றை சைட்டில் கிரேன் உதவி கொண்டு இணைத்து அடுக்கி, அவற்றை வெல்டிங் மற்றும் போல்டுகள் துணை கொண்டு கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்; அதுவும் சற்று கவனக்குறைவாய் இருந்து விட்டாலோ, தொழிலாளர் மேலே விழுந்து, காவும் வாங்கி விடும் :-( இதனை கட்டும் காலத்து விபத்துக்கள் என்பர் (erection time accidents/collapse)
பிள்ளைகள் விளையாடும் பில்டிங் செட் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? ஒரே மாதிரி உதிரிகளால், விதம் விதமான அழகான கட்டிடங்களை நொடியில் கண்ணை கவரும் விதமாக செய்யும் வண்ணம் வடிவமைக்க பட்டிருக்கும் அவை! இதே போல பெரிய கட்டிடங்களுக்கும் ஒரு பில்டிங் செட் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இருக்கிறது, அதுதான் பி.இ.பி (P.E.B) என செல்லமாக அல்லது சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரி இன்ஜினீயர்டு பில்டிங்! (pre engineered building )
ஒரே நாளில் பி.இ.பி பற்றிய மொத்த விவரங்களையும் பார்த்தால், போரடித்து, ஓவர் டோஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளதால், மேலும் பல விவரங்களை வரும் பதிவுகளில் தர நினைக்கிறேன். புத்தாண்டில் தொடர்ந்து சந்திப்போம், என்ன சரியா? :-))

No comments:
Post a Comment