ஹாய்.. நான்தான் டைனோ.. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா? :)))
துளசி மேடத்துக்காக ஒரு பதிவு..
(தமாம் பாலா)
உயிர்களிடத்தில் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதை ப்ராக்டிகலாக, துளசி மேடம் போடும் 'கோபாலகிருஷ்ண பூனையார்' பற்றிய பதிவுகளில் காணலாம். நமக்கும் பிராணிகளுக்கும், ஏழாம் பொருத்தம்; பார்த்தாலேயே பயந்துவிடும் ஜாதகம்.. :-)) என்னைப்பார்த்து.. பிராணிகள், அல்ல.. பிராணிகளை பார்த்து.. அடியேன்!
விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும், குழந்தைகள்.. புதிதாக டைனோ என்று நாய்க்குட்டியை பிடித்திருக்கிறோம் என்றதும், என் விடுமுறையையே 'கேன்சல்' பண்ணிவிடுவது உத்தமம் என்றுதான் முதலில் தோன்றியது.. எதுக்கும் போய் பார்க்கலாம் என்று துணிவை(?!) திரட்டிக்கொண்டு வந்து விட்டேன்.
இன்று காலை, சென்னைக்கு வந்த பிறகு, வீட்டில்.. விசேஷ வரவேற்பு, மனைவி/குழந்தைகளிடம் இருந்து அல்ல.. டைனோவிடமிருந்து! அவள் ஒரு ரெண்டுமாத குட்டியாமே? குழந்தை போல.. அப்படி ஒரு அழகு, அன்பு ரொம்ப நாள் பழகியது போல் ஒட்டிக்கொண்டு விட்டாள்! வேத்துமுகம் குழந்தைகளுக்கு கிடையாது என்பார்கள்; சுலபமாக எல்லோரிடமும் ஒட்டிக்கொண்டு விடும்; அந்த விஷயத்தில், டைனோவும்.. தான் ஒரு குழந்தைதான் என்று நிரூபித்து விட்டது!
உங்களுக்காக, குறிப்பாக துளசி மேடத்துக்காக.. டைனோவின் புகைப்படம் மேலே!
4 comments:
அப்ப இப்ப வெக்கேஷனா?
சூப்பரூ! :))))
இனிய விடுமுறையாக அமைய வாழ்த்துக்கள் :)
அருமை அருமை.
ஹைய்யோ எத்தனை அழகு. எங்க சிண்ட்டு மாதிரியே அசப்பில் இருக்கான்.
நம்ம வீட்டில் எப்பவும் ள் ம் ன் தான்.
செருப்புகள் பத்திரம். இல்லேன்னா நாம் நம்ம ஒரு காலை கட்டிக்கனும். எந்தக் கால் என்பது அப்பப்ப மாறும்:-)))
ஆமாம்.... நீங்க இங்கே வரும்போது டைனோவையும் கொண்டுவரலாம்தானே?
// ஆயில்யன் said...
அப்ப இப்ப வெக்கேஷனா?
சூப்பரூ! :))))
இனிய விடுமுறையாக அமைய வாழ்த்துக்கள் :)//
நன்றி, ஆயில்யன். வெக்கேஷன், அது
வருடம் ஒருமுறை வரும் வசந்தம்..
நீங்க.. எப்போ?
//துளசி கோபால் said...
அருமை அருமை.
ஹைய்யோ எத்தனை அழகு. எங்க சிண்ட்டு மாதிரியே அசப்பில் இருக்கான்.
நம்ம வீட்டில் எப்பவும் ள் ம் ன் தான்.
செருப்புகள் பத்திரம். இல்லேன்னா நாம் நம்ம ஒரு காலை கட்டிக்கனும். எந்தக் கால் என்பது அப்பப்ப மாறும்:-)))
ஆமாம்.... நீங்க இங்கே வரும்போது டைனோவையும் கொண்டுவரலாம்தானே?//
வாங்க, துளசி டீச்சர்..
நீங்க சொன்னமாதிரியே செருப்பையெல்லாம் க்டிச்சு தொம்சம் பண்றா(ள்)ன் டைனோ.. :)))
அதனாலே ஒரு ச்யூஸ்டிக் வாங்கி குடுத்திருக்கோம். அவனை உங்க ஊருக்கு கூட்டி வரலாம், ஆனா எங்க ஊருக்கு முடியாது :(
Post a Comment