தமாம் பாலா
8.ஆசிரியர்களில் ஆயிரம் வகை..
பேச்சையே தொழிலாக கொண்டவர்களில் இரண்டு வகை உண்டு. புரியாததை புரிய வைக்கும் விதமாக பேசும் ஆசிரியர்கள், ஒரு வகை; புரியாத வகையில் பேசும் அரசியல்வாதிகள், இன்னொரு வகை. சாமான்ய மனிதர்கள், இரண்டு வார்த்தை பேசினாலேயே களைப்படைந்து விடுகிறார்கள்; ஆசிரியர்களும்,அரசியல்வாதிகளும் நாள் முழுவதும் பேசினாலும் டையர்ட் ஆவதே இல்லை.
K.H.S. பள்ளியிலும், ஆசிரியர்கள், அவர்களில் அரசியல்வாதிகள், ஹீரோக்கள், வில்லன்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் உண்டு. நான் படித்த காலத்தில் அவர்கள் மீது கொண்ட மரியாதை இன்னும் குறையவில்லை; அந்த வயதில் நான் அவதானித்த அவர்களது மேனரிசத்தை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஹெட்மாஸ்டர் மாதவராவ்:
குள்ளமாக இருப்பார்; மீசையில்லாமல், வெற்றிலை சிவப்பு வாயோடு. அரசியல்வாதி போல பேசுவார். ஒரு முறை, எங்கள் வகுப்புக்கு வந்திருந்தார்; என்னை பார்த்ததும் ‘அறிவு களை’ தெரிந்ததோ, என்னவோ.. பரிட்சையில் அதிக மார்க்கு வாங்க வேண்டும் என்றால் எட்டு! ‘எட்டு என்றால் என்ன?’ என்று கேட்டார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல், ‘எட்டு என்றால் ஒரு நம்பர்’ என்றேன். :))) ‘அறிவு களை’ மறைந்து விட்டதால், தலைமை ஆசிரியரும் எதுவும் விவரம் சொல்லாமலேயே வகுப்பை விட்டு போய்விட்டார்!
தமிழ் ஆசிரியர் ராஜப்பா:
ஆக, மீசை, சுருள் முடி, பேண்ட் சட்டை என்று பிற தமிழ் ஆசிரியர்களிடமிருந்து வித்தியாசமாக இருப்பார். தமிழ் இலக்கணத்தில், அவன், இவன், உவன் என்பார்; அதிகம் நான் ‘உவன்’ பற்றி கேள்விப்பட்டதில்லை, எனவே ராஜப்பா சாரும், உவனும் சேர்ந்தே நினைவில் இருக்கிறார்கள்.
ஒன்பதாவது வகுப்பு ஆசிரியர் ஈ.டி.எஸ்:
குண்டாக, எம்ஜிஆர் முன் கிராப் சுழியுடன் பார்பதற்கு சினிமாவில் வரும் தாதா போல இருப்பார்; ஆனால் மிகவும் மென்மையான சுபாவம்; ஆத்மார்த்தமான, ஈடுபாடுடன் கூடிய பாடம் நடத்துதலால், எனக்கு ஆங்கிலத்தில் பள்ளி முதல் இடத்தில் மெரிட்கார்ட் கிடைக்க உதவியவர்.
மாத்ஸ் கே.பி.ஸார்:
உயரமான, அதற்கு ஏற்ற எடையோடு, திக்கான கண்ணாடி அணிந்திருப்பார். க்ளாஸில், இதுதான்.. D என்பார், பசங்களும், கூடவே.. இதுதாண்டீ என்பார்கள்;தமாஷாக இருக்கும். பாடம் நடத்தும் வேகத்தை விட மாலையில் பள்ளி க்ரவுண்டில் கிரிக்கெட் ஆடும் வேகம் அதிகம். :)))
ஸைன்ஸ் கோவிந்தராகவன் சார்:
சிவப்பு நிறம், நோ மீசை/மழமழ ஷேவ் செய்த முகம், பூனைக்கண், சுருட்டை முடி. ஜனநாயக வாதி.. எப்படி என்று கேட்கின்றீர்களா? ஃபார் தி பீப்பிள், பை தி பீப்பிள் என்கிற மாதிரி; யாரையும் கை நீட்டி அடிக்கவே மாட்டார். உடனே அவசரப்பட்டு, ரொம்ப நல்லவர் என்று நினைத்து விட வேண்டாம்! யாராவது தப்பு செய்து விட்டால், அவ்வளவு தான்!! “போடு தம்பி அங்கே..” என்பார். உடனே, பையன்கள், வேட்டைநாயின் வெறியில், கை நீட்டிய திசையில் உள்ள பையனை ஹோல்சேல்ஸில் குட்டுகள் போட்டு தள்ளிவிடுவார்கள்;அவ்வப்போது பழைய பாக்கிகள் செட்டில் ஆகிவிடும்! ஹ்யூமன் ரைட்ஸ்/ஸ்டூடண்ட் ரைட்ஸ் பற்றி எங்களுக்கு தெரியாத காலம் அது :-(( இப்போது என் பெண்ணை மிரட்ட (?!) முயற்சித்தால் கூட, பதிலுக்கு அவள்.. சைல்டு ப்ரொடக்ஷன் ஃபோர்ஸ் நம்பர் என்ன, என என்னை பதிலுக்கு மிரட்டுகிறாள்! :-))))
விஜயகுமார் சார்:
ஹிஸ்ட்ரி சார்; 80களில் கலக்கிய ‘மைக் மோகனின்’ ஜாடையில் கொஞ்சம் பூசினால் போன்ற வடிவம். பொதுவாக ரொம்ப நல்ல சார்; அபூர்வமாக, வாட்சை கழட்டுகிறார் என்றால், யாருக்கோ ‘பூசை’ போடப்போகிறார் என்று அர்த்தம்!
எல்.எம்.ஸ் சார்:
இவரும் ஹிஸ்ட்ரி/ஜாகரஃபி சார் தான்; இந்தி படம் பார்த்திருப்பீர்களே, அந்த காலத்தில், குண்டாக.
கட்டை குட்டையாக, உருண்டையான வழுக்கை தலையுடன்,ப்ரஷ் மீசையுடன் ‘ப்ரேம் நாத்’ என்று மிரட்டலாக! அவரை பார்த்தால், எல்.மரியசூசை சாமிராசு என்ற எல்.எம்.எஸ் ஐ பார்க்க வேண்டாம், அவ்வளவு உருவ ஒற்றுமை. ஆளுக்கேற்ற பயங்கர குரல். இவரை பற்றியே ஒரு முழு பதிவு போடலாம், அவ்வளவு விஷயம் உண்டு! சாக் பீஸை நெற்றி வியர்வையிலோ, தண்ணியிலோ முக்கி, ப்ளாக் போர்டில் எழுதி விடுவார்; போர்டில், எழுத்துக்கள் ஞாயிற்று கிழமை பள்ளி பிள்ளைகள் போல மெல்ல எழும்; பிறகு காய்ந்து விட்டதும், பளிச்சென்று தெரியும். மானிட்டர் அழிக்கும் போது, லேசில் அழியாமல், ஆண்டு விடுமுறை பசங்கள் போல ஆட்டம் காட்டும். எங்கள் வகுப்பின் குறும்பு பையன், ஜான் ப்ரிட்டோ க்ளாஸ் நடக்கும் போது, தொந்தரவு பண்ணி விட்டான்; அடி நிமித்தி விட்டார், நாங்கள் பயந்தே போய்விட்டோம்!
(ப்ரிட்டோ பற்றி, இன்னொரு பதிவிலும் எழுதுவேன் :-)))
நான் எழுதுவதை வைத்து, எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் எல்லாம் ராட்சஸர்கள்/ பயங்கரமானவர்கள் என்று, முடிவு செய்து விடவேண்டாம் நண்பர்களே, உண்மையில் அவர்கள் எங்கள் முன்னேற்றத்தில், மிகுந்த அக்கறை செலுத்தியவர்கள். பத்தாம்/பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் கிடைக்க, ஸ்பெஷல் க்ளாஸ் அது இது என்று எங்களை பெண்டு நிமித்தி விடுவார்கள்; இஞ்சினியரிங்/மெடிக்கல் காலேஜ் சீட்டுக்கு அந்த காலத்திலேயே க்யாரண்டியான பள்ளியாக்கும்.. K.H.S.S!!
ஹனீஃப் சார் பற்றி சொல்ல மறந்து விட்டேனே! இங்க்லீஷில் அத்தாரிட்டி அவர்; அவ்வளவு ஸ்மார்ட், ஆக்ஸ்ஃபோர்ட் இங்க்லீஷ் நுனிநாக்கில் விளையாடும்; அவரைப் பார்த்து ஆங்கிலத்தில் எங்களுக்கு மோகமே வந்துவிட்ட்து. என்னை ‘நெவர் பி செகண்ட் டு எனி ஒன்’ என்று எழுதி ஆட்டோக்ராப் போட்டு கொடுத்தார்; அவர் சொல்லை தட்டாமல், ஃபர்ஸ்ட் வரமுடியாத இடங்களில், தேர்ட் ஆகி விட்டேன், வாத்தியார் சொல்லை தட்டக்கூடாது, அல்லவா? :-)))
எங்கள் +2 காலத்தில் ‘கல்யாணராமன்’ சார் வந்து சேர்ந்தார்; அந்த கால காதல் இளவரசன் கமல் போல ஸ்டெப் கட்டிங்/தொங்கு மீசை.. கான்வெண்டிலிருந்து வந்த மாணவிகள், பார்க்கும் போதெல்லாம் குட்மார்னிங் சொல்லி, வழிய.. ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேலே குட்மார்னிங் சொல்லக்கூடாது என்று 144 போட்டுவிட்டார், அந்த இளம் வயது ஹீரோ!
சத்திய மூர்த்தி, என்றும் ஒரு வாத்தியார் இருந்தார்; வழக்கமாக ரொம்ப சாது, ரொம்ப நல்லவர். கோபம் வந்து விட்டால், நான் என்ன சிண்டு வெச்சிருக்கேனே? காதுலே பூ வெச்சிகிட்டிருக்கேனா? இந்த வடபாதி மங்கலம் வேலை எல்லாம் வேண்டாம் என்று கத்திவிடுவார்!
இது எல்லாம் 1982 நிலவரங்கள்; அப்போதே பெரும்பாலான வாத்தியார்கள் 40+.. இப்போது மெஜாரிட்டி ரிடையர் ஆகி இருப்பார்கள், என்று நினைக்கிறேன். இன்றைய ஆசிரியர்கள், பிரம்பு இல்லாமல் கனிவை மட்டுமே பயன்படுத்தும் நம் வலைபதிவாசிரியர் சுப்பையா வாத்தியார் போல இருப்பார்கள் என்று நம்புகிறேன். பழைய கணக்காய் நான் இன்று எழுதியதை பொறுமையுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! :-)))
தஞ்சையிலிருந்து தமாம் தொடரும்...

6 comments:
//அவர் சொல்லை தட்டாமல், ஃபர்ஸ்ட் வரமுடியாத இடங்களில், தேர்ட் ஆகி விட்டேன், //
:))
// ஹெட்மாஸ்டர் மாதவராவ்://
1994ல் சென்னைல ரங்கராஜபுரம் இந்தியன் பாங்கில் பார்த்தேன்.
அப்போதே ஓய்வு பெற்று விட்டதாக சொன்னார்.
P.V.R என்று ஒரு ஆசிரியர் இருந்தாரே (A.H.M) இவர் நடிகர், அரசியல்வாதி S.V.Shekar மைத்துனர் . நினைவில்லையா.
S.V.Shekar, எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் K.H.S முன்னாள் மாணவர்களே.
வாங்க இலவச கொத்தனாரே,
தங்கள் ஸ்மைலி, எங்கள் பாக்கியம் :))
வாங்க தஞ்சாவூர்காரரே,
பி.வி.ஆர்.. நினைவுக்கு வந்து விட்டது! எங்கள் பாட்டனி வாத்தியார்.. என்ன டாக், நாஸ்டாக் என்று ஜோக் அடிப்பார்.
ஜி.வி.மீனாஷி டீச்சரையும் மறந்து விட்டு விட்டேன். +2 பயாலஜி டீச்சர்; அடலசெண்டுகளுக்கு அழகாக பாடம் நடத்திய டீச்சர் அவர்!
உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி!
அருமையான கேரக்டர் ஸ்டடி. ஆசிரியர்களை நன்கு நினைவு கூர்ந்து பதிந்திருக்கும் விதம் அருமை.
வாங்க ராமலஷ்மி,
இப்போ விடுமுறை அலைச்சலில் இருப்பதால், வலை ஆகிவிட்டது தொலை! :))
தங்கள் பின்னூட்டத்துக்கும் அன்புக்கும் நன்றி!!
Post a Comment