August 6, 2008

மடக்கு

மடக்கு
(கார்த்தி)

கவிதையே
எங்கே சென்றாய்
என்னைக் கண்டு பயம ஏன்


நான் என்ன செய்தேன்
ஏன் என்னைச் சேராமல் நிற்கிறாய்
நானும் எழுதுகிறேன்
கவிதையென்று

மடக்கி மடக்கி
உரைநடையை
என்ன செய்ய

நானறிந்த தமிழ் அப்படி
கவிக்கோ தயவிருந்தால்
வென்றிடலாம் கவிதையுலகை
தயவொன்று கிடைத்திடுமா

நான் படித்த
வைரமுத்து தமிழ்
கொண்டு அறிந்தேன்
இப்படித்தான்

மடக்கி மடக்கி
எழுதினால்
கவிதையென்று

எங்களூரில் இனிப்பொன்று
உண்டு மடக்கு என்று
நாடா போன்று மாவை
மடக்கி மடக்கி பொறித்து
இனிப்பேற்றி வைப்பார்கள்

அதைப் பார்த்து உண்டு
மகிழ்ந்ததனால்
எழுதினாரோ
கவிதையை
மடக்கி மடக்கி

நானும் உண்டதனால்
எழுதிப்பார்க்கிறேன்
மடக்கி மடக்கி
வந்து விடாதா
கவிதையும் என்று

மடக்கி மடக்கி
முயல்வதைப் பார்த்து
மடங்காமல்
தறிகெட்டு ஓடுகிறது
கவிதை
எனைக்கண்டு!

சோகத்துடன்
வைரமுத்துவுக்கு பக்கத்து ஊர்க்காரன்


3 comments:

Dammam Bala (தமாம் பாலா) said...

வாழ்த்துக்கள், கார்த்தி! மீண்டும் எழுத விழைந்தமைக்கு..

நீட்டி,மடக்க முடியும் வரை கவிதையில் மட்டுமல்ல நம்மிலும் உயிர் மிஞ்சியிருக்கும்.

ஒரேடியாக நீட்டினாலோ, மடக்கி விட்டாலோ.. க(வி)தை..முடிந்தது!

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Dammam Bala (தமாம் பாலா) said...

செஞ்சிடலாம் விஜய்.

உங்க விழிப்புணர்வுக்கும் சமுதாய பொறுப்புக்கும் நன்றி. முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!