கண்ணீரை.. உலகமயமாக்கு..
பாலசுப்ரமணியன்
காட்டில் குருதியைக் குடிக்கும்
அட்டையை சுட்டுகொளுத்துவோம்
நாட்டில் நம் ரத்தத்தை உறிஞ்சும்
குட்டிகொசுவையும் கொல்லுவோம்
அடுத்தவன் நாட்டில், பெருவல்லரசும்
அதிரடியாய் புகுந்து, அதற்கும் நியாயம்
உலகுக்கு கற்பித்து, எரிஎண்ணெயையும்
உயிரையும் குடிக்கும் கொடுமையையும்
ஜனநாயம் பேசும், பணநாயகம் பாடும்
இனப்படுகொலை தினம் பல செய்யும்
மனசாட்சி அற்றவரைக் கண்டிப்போம்
என காத்தரினா, ரீட்டா, வில்மா மட்டும்
நூறுகோடி மக்கள் நாம் இருந்தும்
போறாத நிலத்தடி நீர்வளத்தையும்
கூறு போட்டு உறிஞ்சுபவரையும்
யாரு தட்டிக்கேட்பது என்போம்
நதியை இணைக்க சும்மா பேசுவோம்
வறுமையை தாராள மயமாக்குவோம்
தண்ணீரை தனியார் வசமாக்குவோம்
கண்ணீரை உலக மயமாக்குவோம்!
(நன்றி: கீற்று.காம்)
3 comments:
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
ஆமாம்
பேசுவோம் பேசுவோம் பேசிக் கொண்டே இருப்போம்..
கேட்போம் கேட்போம் கேட்டுக்
கொண்டே இருப்போம்..
பின் கண்ணீரைத்தான்
உலக மயமாக்குவோம்:(((!
நல்ல கவிதை!
வாங்க ராமலஷ்மி.
ரொம்பவே சரியா சொன்னீங்க!
ஏதோ நம்மாலே முடிஞ்சது அவ்வளவுதான் :-)))
Post a Comment